ஞாயிறு, 25 மே, 2014

THANTHAIKULAMEE.. ORU SALUTE UNGALUKKU!..தந்தைக்குலமே... ஒரு சல்யூட் உங்களுக்கு!..


ஆகவே மக்களே!.. கோடை விடுமுறை முடிச்சு நான் வந்தே ஆச்!..கொளுத்துகிற வெயிலும் கொஞ்சம் மழையுமாய் மதுரை மதுரமா இருந்தது எப்பவும் போல.. மீனாட்சி திருக்கல்யாணம், கள்ளழகர் தரிசனம் எல்லாம் திவ்யமாய் ஆச்சு!..

எப்பவும் போல ஊர் மக்கள், 'எப்படி இருக்கே?.. எப்ப வந்தே?..இளைச்சு(???)ப் போய்ட்டியே (இது..இது...இதனால தான் எனக்கு மதுரை எப்பவுமே பிடிக்கும்!!), இப்படியாப்பட்ட விசாரிப்புகள், உபசரணைகள் அப்படின்னு ரொம்ப சந்தோஷமாப் போச்சு விடுமுறை!.. 

இந்த விடுமுறைல நான் பார்த்த, என்னைப் பாதித்த விஷயங்கள் நிறைய.. ஒண்ணொண்ணாப் பகிர்ந்துக்கறேன்..

முதல்ல இன்னைக்குத் தேதிக்கு சிந்தனைப் போக்குல வந்திருக்கற ஒரு மாற்றம்!.. இது என்னை ரொம்பவே யோசிக்க வச்சதால முதல்ல  வருது..