செவ்வாய், 10 டிசம்பர், 2013

MINI STORIES.... KADAVUL SEYAL!!!.....சின்னஞ்சிறு கதைகள்...கடவுள் செயல்!!!


அது ஒரு அடுக்கு மாடிக் கட்டிடம்!!... கட்டுமானப் பணிகள் இன்னும் முடிவடையாத சூழல். 

அந்தக் கட்டிடத்தின் கட்டுமானப் பணியை மேற்பார்வையிடுபவர், ஆறாவது தளத்தைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தார். ஏதோ காரணமாக, கீழ்த்தளத்தில் வேலை செய்யும் தொழிலாளியை அழைக்க வேண்டியிருந்தது.

அவர் பல முறை அந்தத் தொழிலாளியைப் பெயர் சொல்லி அழைத்தும், கட்டிட வேலையில்  எழுந்த பலவித ஓசைகளின் காரணமாக, அது அந்தத் தொழிலாளியின் செவிகளில் விழவில்லை. 

அந்தத் தொழிலாளியின் கவனத்தைத் திருப்புவதற்காக, ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து, அந்தத் தொழிலாளியை நோக்கிப் போட்டார். அந்தத் தொழிலாளி, தன் அருகில் விழுந்த அந்த ரூபாயை எடுத்தார்!!. சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, மகிழ்ச்சியுடன் அதை எடுத்து, தன் சட்டைப் பையில் வைத்துக் கொண்டு, வேலையைத் தொடர்ந்தார்.

மேற்பார்வையாளர், புன்முறுவலுடன், ஒரு ஐநூறு ரூபாய் நோட்டை எடுத்துப் போட்டார். இம்முறையும்,  தொழிலாளி, அதை மகிழ்ச்சியுடன் எடுத்து, சட்டைப் பையில் வைத்துக் கொண்டு வேலையைத் தொடர்ந்தார்.

மேற்பார்வையாளர் சற்று யோசித்தார். ஒரு சிறு கல்லை எடுத்து, தொழிலாளியை நோக்கி, குறிபார்த்து எறிந்தார். தொழிலாளி, இம்முறை சரேலென  நிமிர்ந்து பார்த்தார். மேற்பார்வையாளர், இப்போது அவருடன் பேச இயன்றது.

நம் வாழ்வும் பல முறை இம்மாதிரியான நிகழ்வுகளினூடே செல்கிறது. நமக்குக் கிடைக்கும் பெரிய, சிறிய லாபங்கள் அனைத்தையும் நம் அதிர்ஷ்டத்தின் காரணமாகவோ, திறமையின் காரணமாகவோ  கிடைத்தது என நினைக்கிறோம். ஆனால் ஒரு சிறு கஷ்டம் வந்தாலும் கடவுளிடம் ஓடுகிறோம். பலருக்கு, கடவுள் ஒருவர் இருக்கும் நினைவே கஷ்டம் வரும் போது தான் வருகிறது.

நமக்குக் கஷ்டத்தைக் கொடுத்தவர் அவரே என்றும் அதைத் தீர்க்க வேண்டியது அவரது கடமை என்றும், தீர்க்காவிட்டால், 'கடவுளே இல்லை' என்றும் கூறும் பலரை நாம் கண்டிருப்போம்.

நமக்கு நல்லவை நடக்கும் போது இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். அப்போது தான், பிரச்னைகள் வரும் போது அவரிடம் முறையிடுதலை முழு மனதோடு செய்ய இயலும்.

உண்மையில் நமக்கு வருபவை எல்லாம் கஷ்டங்கள் அல்ல. இறைவன் நமக்கு வைக்கும் சோதனைகள். அதன் மூலம் அவர் நமக்கு ஏதோ தெரிவிக்க விரும்புகிறார். இதை உண்மையாக உணர்ந்தால், இறைவனின் குரலை நமக்குள்ளும் நிச்சயம் கேட்கலாம்.

இந்தப் பிறவியை நமக்குக் கொடுத்ததற்கு, இந்த இனிமையான வாழ்க்கையை அருளியதற்கு, நல்ல பெற்றோர், நண்பர்கள், தொழில், செல்வம், ஆரோக்கியம் என அனைத்துப் பேறுகளும் வழங்கியதற்கு, அன்றாடம் இறைவனுக்கு நன்றி சொல்வோம்.

வாழ்க்கை, நாம் எதைத் தருகிறோமோ அதையே திரும்ப வழங்குகிறது.... மன மகிழ்வுடன், நமக்கு அருளப்பட்டவைகளுக்காக, இறைவனுக்கு நன்றி சொல்லத் தொடங்குவோமானால், மேன்மேலும், இறைவனுக்கு நன்றி சொல்லும் வாய்ப்பை, வாழ்க்கை கொடுத்துக் கொண்டேயிருக்கும்!!!. நிச்சயமாக..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!!!

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

14 கருத்துகள்:

  1. நல்லதொரு விஷயத்தை நயம்படச் சொல்லியுள்ளதற்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  2. அருமையான கதையுடன் கூடிய
    வாழ்வியல் பொருள் கூறும் பதிவு.
    அருமையாக இருக்கிறது சகோதரி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி சகோதரரே!!

      நீக்கு
  3. சொன்ன விதம் மிகவும் அருமை...

    வாழ்த்துக்கள் அம்மா...

    பதிலளிநீக்கு
  4. நாம் ஒன்றோடு உறவாடும்போது நாம் அதுவாகவே மாறிவிடுகிறோம்.

    இதயம் சுத்தமானால் புத்தியில் தெளிவிருக்கும் யார் ஒருவர் எந்த சூழ்நிலையிலும் அறிவுத்தெளிவை தவறவிடாமல் இருக்கிறாரோ அவரிடம் அறிவு அகன்று விஸ்தாரமாகிறது. அவர் எது தனது எது அடுத்தவருடையது என அறிகிறார். அது நஷ்டமோ லாபமோ .இறைவனை போற்றும் ஒரு நல்ல சிறுகதை பாராட்டுக்கள்.

    .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆழ்ந்து வாசித்து கருத்துரை தந்தமைக்கு மிக்க நன்றி சகோதரரே!!

      நீக்கு
  5. உங்களுக்கு பல தளங்கள் கீழே தான்
    நான் நின்று கொண்டு இருக்கிறேன்.

    சீக்கிரம் ஒரு ஆயிரம் ரூபா
    ( இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டுகளா )
    கீழே போடுங்கள்.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆயிரம் ரூபாய் எப்படிப் போதும்!!!.. அக்ஷர லக்ஷம் தரவேண்டியவர் அல்லவா நீங்கள்!!!.. சீக்கிரமே போடுறேன் :-))))))

      நீக்கு