வியாழன், 17 அக்டோபர், 2013

NAVARATHIRI KAVITHAIGAL.. PART 7..நவராத்திரி கவிதைகள்.. பகுதி 7 ..ஸ்ரீ மாஹேஸ்வரி

சப்த மாதர்களுள் ஒருவரான ஸ்ரீமாஹேஸ்வரி தேவியைக் குறித்த பாடல்...

ருத்ரனின் சக்தியே ருத்ராணி தேவியே
ரிஷபத்தின் மீதிருந்தருள் தரும் சூலியே
ரௌத்ரி, மகேசி, மாஹேஸ்வரி மாயே
ர‌க்ஷித்தருள்வாயே நானும் உன் சேயே

வெள்ளைக் கலையுடுத்தி வந்தருளும் தாயே
வடகிழக்கு திக்கின் அதிபதியும் நீயே
கரம் நான்கில் சூலம், மான், மழு, கபாலம்
கனிந்தருளும் விழி மூன்றும் கொண்டவள் நீயே

கற்றைச் சடைமுடியில் சந்திரன் துலங்க
பற்றை அழித்தருளும் புன்னகை இலங்க‌
இற்றை பொழுதினிலே எழுந்து நீ வருவாய்
 ஒற்றை வழிப் பிறவி நோயதனைத் தீர்ப்பாய்

பக்தர் தம் மனத்திருக்கும் உக்ரமதை நீக்கி
பல நலனும் தரும் சாந்தம் உள்ளமதில் தேக்கி
பனி நிகர் குணமளித்து பல கலையும் அருள்வாய்
பார் புகழும் வாழ்வளித்து பதமலரும்  தருவாய்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!!

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்..

8 கருத்துகள்:

  1. ஸ்ரீமாஹேஸ்வரி தேவி பாடல் அருமை...

    நன்றி... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. கனிந்தருளும் விழி மூன்றும் கொண்டவள் நீயே
    அன்னையின் அழகான பாடல் பகிர்விற்குப் பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  3. அருமையான ஆக்கம். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு