வியாழன், 25 அக்டோபர், 2012

தனுசுவின் கவிதைகள்...சின்னத்திரை நாயகி





குளுமையாய்ப் பொழுது புலர்ந்தது
முழுமையாய் புதுப்பொழுதும் துவங்கியது
என்
இல்லத்தரசியின்
முகம் மட்டும் மாறவில்லை!

அது
நேற்றைய நெடுந்தொடரின் தாக்கம்.
இன்னும்
அவள் நெஞ்சைவிட்டு அகலவில்லை!

அவளின்
சோகத்தையும் சந்தோஷத்தையும்
தீர்மானிப்பது
முந்தைய நாள் மெகா தொடர்களே!

அதற்குச் சாட்சி
இன்று அவளின் செயல்பாடுகள்,

தேனீர் கோப்பையின் வருகை
தெளிவாய்ச் சொல்லும் அவளின் இருப்பை!
தீய்ந்துபோன தோசை
தெரியப்படுத்தும் மீதி மனசை!

பள்ளி செல்லும் பிள்ளைக்கு
வழி அனுப்பும் தோரணை
பால்காரனின் வருகைக்கு
பதில் சொல்லும் பாவனை
பட்டு கட்டிய மேனிக்கு
அவள் செய்யும் ஜோடனை
இவைகளை
சொல்லித்தருவதெல்லாம்
இன்றைய
மெகா தொடரின் சாதனை!

காலைத் தொடர் கலகலப்பூட்டினால்
மதிய உணவு ருசிக்கும்
மதியத்தொடர் மனம் தொட்டால்
மாலை நேரம் மணக்கும்
அத்துடன்
மாமியார் உறவும் சிறக்கும்!

ஏழுக்கு "நாகம்"
ஏழரைக்கு "தாகம்"
எட்டுக்கு 'காடு'
எட்டரைக்கு "சாப்பாடு"
ஒன்பதுக்கு "அலி"
ஒன்பதரைக்கு "பத்தாம் பசலி"
பத்துக்கு "மாமியார்"
பத்தரைக்கு "சாமியார்"
பக்கத்தறையில் கணவன்
நித்திரையில் தனியாய்!

மீண்டும்
நாளை விடியும்
அதே சுழற்சி தொடரும்!
காலம் பொன் என்பதை
கட்டிக்காக்கும் தாய்க்குலம்
காலை முதல் இரவு வரை
தொலைக்காட்சி நெடுந்தொடரால்
இரும்பு மனுஷி எனப்பட்டவள்
இயந்திர மனுஷியாகிவிட்டாள்!

-தனுசு-

2 கருத்துகள்:

  1. அருமை நண்பரே அருமை!

    இது ஒரு முக்கியமான பிரச்சனை...
    இயற்கையிலே கலைகளில் அதிக ஆர்வம் உள்ள
    இந்தியர்களுக்கு முக்கியமாக தமிழர்களுக்கு
    இது ஒரு பெரும் சவாலாகவே இருக்கிறது.

    அழகான வரிகளின் வழியே மனதை தூண்டிய ஆதங்கம்....

    பதிலளிநீக்கு
  2. கவிதையை வெளியிட்ட சகோதரி அவர்களுக்கு மனமார்ந்த நண்றிகள்.

    ஜி ஆலாசியம் said...
    ....அழகான வரிகளின் வழியே...

    ஆமாம் முன்பு பொழுது போக்குக்கு தொலைக்காட்சி பார்த்தது இன்று பொழுது முழுக்க அதுவே கதியாகி விட்டார்கள், இருப்பினும் ஆண்களுக்கு வெளி உலகம் என வெளியில் வந்து விடுகிறார்கள், ஆனால் பெண்கள் வீட்டிலேயே அடைந்து கிடப்பதால் நாம் இதனை கொஞ்சம் அனுசரிக்க வேண்டி உள்ளது, இது கொஞ்சம் ஜாலிக்காக எழுதியது.

    நன்றிகள் நண்பரே.

    பதிலளிநீக்கு